அல்பக்கர்க் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பலூன் திருவிழாவில் பறக்கவிடப்பட்ட வெப்பக் காற்று பலூன்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
அமெரிக்காவில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பலூன் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஒன்பது நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா தொடங்கிய போது மோசமான வானிலை காரணமாக பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
நேற்று வானம் தெளிவாக காணப்பட்டதால் நூற்றுக்கணக்கான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் பங்கேற்றுப் பல வண்ணங்களில், பல வடிவங்களில் பலூன்களை வானில் பறக்கவிட்டனர். காற்றில் மிதந்த பலூன்களைக் கண்டு அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர். 13ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த பலூன் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளன.