இடைவிடாது பெய்த ஆலங்கட்டி மழை!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜலன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஜலன் பகுதியில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் ஐஸ்கட்டிகள் வாகன ஓட்டிகள் மற்றும் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது விழுந்தன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இடைவிடாது பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதியே பனிப்படலமாக மாறியது. வீதியில் கிடந்த ஐஸ்கட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Exit mobile version