திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் மானாவாரி கடலை சாகுபடி தொடங்கியுள்ளது
தமிழகம் முழுவதும் பருவ மழை சரிவர பெய்யாத நிலையில் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதோடு கால்நடைகளுக்கு தேவையான புற்களும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் மானாவாரி கடலை சாகுபடியைத் துவங்கியுள்ளனர்.
இதற்காக நிலத்தை டிராக்டர் கொண்டு சமன்படுத்தி நிலக்கடலையை பயிரிட்டு வருகின்றனர். இந்த பருவத்தில் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.