தென்காசியில் சிறிய வெங்காயத்தை பந்தாடை அமைத்து பதப்படுத்தும் பணி தீவிரம்

பண்டிகை காலம் நெருங்குவதால் தென்காசி பகுதியில் விளைந்துள்ள சிறிய வெங்காயத்தை பந்தாடை அமைத்து பதப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி பகுதியில் சிறிய வெங்காயம் அறுவடை பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தென்காசி அடுத்துள்ள பாவூர்சத்திரம், மேலபாவூர், இலத்தூர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக சிறிய வெங்காயம் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் சிறிய வெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர்.

தற்போது வெங்காய விளைச்சல் முடிந்த நிலையில் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு உள்ளதால் சிறிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றி பேசிய விவசாயிகள், சிறிய வெங்காயத்தை பந்தாடல் அமைத்து பாதுகாப்பதாகவும், இதில் 3 மாதங்கள் வரை வெங்காயத்தை பாதுகாக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

மேலும், வர இருக்கும் பண்டிகை காலங்களில் சிறிய வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு இருப்பதாலும் பந்தாடை அமைத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Exit mobile version