கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றுப்பகுதி அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அப்பகுதி அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கொசஸ்தலை ஆறு, அடையாறு வெள்ளாறு நீர்பிடிப்பு பகுதிகளில் நீடித்து வரும் தொடர் மழை காரணமாகவும், பூண்டி நீர்தேக்கம் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள அனைத்து அணைப்பகுதிகளையும் முழுநேரமும் கண்காணிக்குமாறு, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு, மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.