சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் கோவில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக்கோயிலில் தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரி லிசன் பெர்னாண்டஸ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கோயில் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version