6 ஆண்டுகளில் இல்லாத அளவாக இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 16 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சலீல் பார்கே, தலைமை நிதி அதிகாரி நீலஞ்சன் ராய் ஆகிய இருவரும் முறைகேடுகள் செய்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. தொடர்ந்து இருவருக்கும் எதிராக நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்குப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் ஒரே நாளில் 16 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் அந்த நிறுவனத்திற்கு மேலும் பல கோடி இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.