உஸ்மான் கவஜா சதம்..முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அபாரம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரெலியா இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி மற்றும் நான்காவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்ட்ங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ட்ராவிஸ் ஹெட்டும், உஸ்மான் கவாஜாவும் நல்ல தொடக்கத்தினைக் கொடுத்தனர். குறிப்பாக உஸ்மான் கவாஜா நின்று ஆடி சதம் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். 251 பந்துகள் எதிர்கொண்டு 104 ரன்கள் அடித்துள்ளார். ஹெட் 32, லபுஷேன் 3, ஸ்மித் 38, ஹேண்ட்ஸ்கோம்ப் 17 அடிக்க கேமரூன் க்ரீன் 49 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்றைய ஆட்டமுடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்திருந்தனர். இந்தியா தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

Exit mobile version