மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக் கூடாது: இந்திரா பானர்ஜி

மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக் கூடாது என புதிய வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 900 சட்ட பட்டதாரிகள் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சியும், இந்தியாவிலேயே முதல் முறையாக இணையதளம் மூலம் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நடை முறையையும், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ஆகியோர் கூட்டாக துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்திய ஜனநாயகத்தில் முக்கிய தூணான நீதித்துறை, மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாக தெரிவித்தார். இதில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது என்றும், நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் தவறாக வழி நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Exit mobile version