தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது.. இந்தியாவில் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட்!

நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் மாணவ மாணவிகளை இணைத்து 150 பிகோ ரக செயற்கைகோள்கள் உடன் இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட் உருவாக்கப்பட்டு நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் மாமல்லபுரத்திலுள் உள்ள பட்டிபுலம் கடற்கரையிலிருந்து நேற்று காலை 8:15 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சவுண்டிங் ராக்கெட்டில் இருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள் மூலம் வானிலைநிலவரம், காற்றின் நச்சுத்தன்மை, மண் வளங்கள், ஆக்சிஜன், ஹைட்ரஜன் அளவு மற்றும் வளிமண்டல நிலை, கதிர்வீச்சு தன்மை குறித்த தகவல்களை பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version