ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை தக்க வைத்து இந்திய அணி அசத்தல்

 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்தலாக ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பெற்று, டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

ஆண்டின் இறுதியில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில், 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. 108 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 107 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Exit mobile version