ஹாக்கி உலகக்கோப்பை : இந்திய அணி தோல்வி!

ஒடிசாவில் உள்ள புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் 15வது ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. நேற்று(22.01.2023) நடந்த நாக் அவுட் சுற்றில் இந்திய ஹாக்கி அணியானது நியூசிலாந்து அணியினை எதிர்கொண்டது. இந்தப் போட்டி புவனேஷ்வரில் நடந்தது. ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையாக போராடி வந்தன. அதிலும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி காத்திருந்தது. இரண்டு அணிகளும் சமநிலையில் மோதிக் கொண்டதால் ஆட்ட நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டியானது சமநிலையில் இருந்தது.

பிறகு நடைபெற்ற பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் நியூசிலாந்தின் கையே ஓங்கியிருந்தது. நியூசிலாந்து அணி இந்திய அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலககோப்பைத் தொடரை விட்டு வெளியேறியது.

Exit mobile version