உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டி: இந்தியா-ஓமன் இன்று மோதல்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான போட்டியில் இந்தியா – ஓமன் அணிகள் இன்று மோதுகின்றன.

32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022 ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ‘இ’ பிரிவில் இந்தியா, ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக்கில் ஓமன் நாட்டை இன்று எதிர்கொள்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. உலக தரவரிசையில் ஓமன் 87-வது இடத்திலும், இந்தியா 103-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version