2022 ல் மட்டும் இந்தியாவில் 84 முறை இணையசேவை முடக்கப்பட்டுள்ளது.. எதற்காக?

இந்தியாவில் கடந்த வருடம் 2022ல் மட்டுமே 84 முறை இணைய சேவையானது முடக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு கூடுதல் தகவலாக 49 முறை காஷ்மீரில் மட்டுமே இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. உலகநாடுகள் மற்றும் இந்தியாவினையும் சேர்த்து கடந்த வருடம் மட்டும் 187 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த வருடத்தின்படி இணைய சேவையை அதிகமாக முடக்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஏன் இந்த இணைய சேவையை அடிக்கடி முடக்கியுள்ளார்கள் என்றால், சில நேரங்களில் காலநிலை மாற்றத்தால் தானாக இணைய சேவை முடங்கியிருக்கும். புயல், வெள்ளம் காரணமாக அது நிகழ்ந்திருக்கும். India Tops Internet Shutdown Globally for 5th Consecutive Year | NewsClick

இதனைவிட முக்கியமாக போராட்டங்கள் நிகழும்போது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காகவும் இணைய சேவைகள் முடக்கப்படும். இதைத் தவிர போர் சூழல்கள், தீவிரவாத தாக்குதல், அரசியல் குழப்பங்கள், பொருளாதார பெருமந்தங்கள் போன்றவைகள் நடக்கும்போதும் இணைய சேவைகளானது முடக்கப்படும். காஷ்மீரிலாவது வருடத்தில் 49 முறைதான் இணைய சேவையானது முடக்கப்பட்டுள்ளது. ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவின் திக்ரே எனும் நகரத்தில் கடந்த இரண்டு வருடங்கள் முழுக்கவும் இணைய சேவை முடக்கப்பட்டே இருக்கிறது. அதற்கு காரணம் அங்கு கற்பழிப்புகள், கொலைகள், இன அழிப்புகள் என்று தொடர்ந்து பெரிய பெரிய கலவரங்கள் நடக்கிறது. இதற்கு இணையமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

Exit mobile version