நாட்டின் 74வது குடியரசுதினம் இன்று!

இந்திய ஆங்கியலேயர்களிடம் அடிமைப்பட்டு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை அடைந்தது. அப்போது இந்தியாவிற்கான தனியான அரசியலமைப்புத் தேவை என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே 1935 ல் ஆங்கிலேயர்களால் இந்திய அரசுச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அதில் சில திருத்தங்களும் மேலும் உலக நாடுகள் சிலவற்றிலிருந்து சில அரசியலமைப்பு விதிகளைப் பெற்றுக்கொண்டும் அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டது. உதாரணத்திற்கு இந்தியாவின் அடிப்படை உரிமைகளின் பகுதிகள் அமெரிக்க அரசியலைப்பிலிருந்தும், அடிப்படைக் கடமைகள் அன்றைய சோவியத் யூனியனான இன்றைய இரஷ்யாவிலிருந்தும் எடுக்கப்பட்டது ஆகும்.

இந்த அரசியலமைப்பினை உருவாக்கம் செய்ய அரசியல் நிர்ணயசபையானது சச்சிதானந்த சின்ஹா தலைமையில் டிசம்பர் 9, 1947ல் கூடியது. அவர் டிசம்பர் 10ல் இறந்து விட்டதால், டிசம்பர் 11ல் மீண்டும் கூடியது. அப்போது அவையின் நிரந்தரத் தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியலமைப்பினையும் வடிவமைக்கும் பொருட்டு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் வரைவுக்குழு ஒன்று கூட்டப்பட்டது. அக்குழுவில் அம்பேத்காருடன் அல்லாடி கிருஷ்ணசாமி, கே.எம்.முன்ஷி, என்.கோபால்சாமி, மாதவ் ராவ், சையது முகமது சாதுல்லா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி போன்ற ஏழுபேர் அரசியலைப்பு உருவாக்கம் பணியில் பங்குகொண்டனர். இவர்கள் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டங்கள் மீதான விவாதப் பொதுக்கூட்டம் இரண்டு வருடங்கள் மற்றும் 11 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் 1949 நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1949 நவம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பானது 1950 ஜனவரி 26ஆம் தேதி அமல்படுத்தலாம் என்று ஜனவரி 24ல் நடந்த இறுதிப் பொதுக்கூட்டம் மூலம் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 26ஆ,ம் தேதியினை முடிவு செய்வதற்கான காரணம் என்னவென்றால் 1929ல் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரம் அடைவதே இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1930 ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாக கொண்டாடினர். ஆகவே இராசேந்திர பிரசாத் ஜனவரி 26ஆம் தேதியில் அரசியலமப்பு செயல்படும் என்று அறிவித்தார். இதனை ஒட்டி இத்தினம் இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய குடியரசு தினத்தினை பொறுத்தவரை நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரே பிரதானமானவர். அரசியலைப்பின்படி, பெயரளவிற்கான நிர்வாகத் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்பின் தலைவர் அவர்தான். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதியில் டெல்லி செங்கோட்டையில் இந்திய குடியரசுத் தலைவர் கொடியேற்றி குடியரசு தினத்தினை தொடங்கி வைப்பார்.

Exit mobile version