நாமக்கல்லில் காந்தி வேடமணிந்து வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ரமேஷ் என்பவர் காந்தி வேடமணிந்து காய்கறி சந்தையில் தேர்தல் செலவுக்கு நிதி திரட்டி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக ரமேஷ் என்பவர் ஹாக்கி மட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் செலவுக்காக வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தார். கடன் கிடைக்காத நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதியபேருந்து நிலையத்தில் உள்ள காய்கறி சந்தையில் காந்தி வேடமணிந்த வேட்பாளர் ரமேஷ் தேர்தல் செலவுக்காக ஹாக்கிமட்டை சின்னத்தில் வாக்கு கேட்டு நிதி திரட்டினார். காந்தி வேடமணிந்து வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் ரமேஷை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Exit mobile version