திருவண்ணாமலை அருகே கனகாம்பர விளைச்சல் அதிகரித்து இருப்பதால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம், அமங்கல்ஓடை, இராந்தம், நூக்காம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானோர் கனகாம்பர பூக்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கனகாம்பரம் பூக்களின் விளைச்சல் அப்பகுதியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் சராசரியாக 50 சென்ட் இடத்தில் நாளொன்றுக்கு 6 கிலோ வரை பூ எடுக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.