நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே அமைந்துள்ள குண்டாறு அணை மூலம் ஆயிரத்து நூறு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், குண்டாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக குண்டாறு அணை நிரம்பி தனது முழு கொள்ளளவான 36 புள்ளி10 அடியை தொட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.