வரத்து குறைந்ததால் சென்னையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 80 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய தேவையான வெங்காயத்தின் வரத்து கடந்த சில தினங்களாகவே பாதியாக குறைந்துவிட்டது. கோயம்பேடு மொத்த காய்கறிகள் சந்தைக்கு ஒருநாளைக்கு 80 முதல் 90 லாரிகளில் வந்த வெங்காய வரத்து, அது பாதியாக குறைந்து இன்றைக்கு 40 லாரிகளில் மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் வெங்காய விவசாயம் கடுமையாக பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். விரைவில் இந்தநிலை மாறி வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.