கடையநல்லூரில் இலவங்காய் விளைச்சல் அதிகரிப்பு

கடையநல்லூர் அடுத்த வீரசிகாமணியில் இலவங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லுரை அடுத்துள்ள வீரசிகாமணியில் இலவங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருப்பதோடு, நல்ல விலைக்கும் விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இலவங்காய் ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு பறிக்கப்படும் இலவங்காய் புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் போன்ற சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version