பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்றும் விசாரணை

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று  8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை தொடர உள்ளது.

கடந்த ஆண்டு சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மேலும் அவரது உறவினர்கள் வீடுகள், டிடிவி. தினகரன்,விவேக் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 180 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 5 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின் அடிப்படையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவுசெய்தது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டது. இந்த நிலையில் ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் உள்ளடக்கிய குழுவினர் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் வைத்து சசிகலாவிடம் நேற்று விசாரணை நடத்தினர். காலையில் தொடங்கிய விசாரணை 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இரவு 7.30 மணிக்கு முடிவடைந்த விசாரணை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version