திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளுரை அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகர், லட்சுமிபுரம் ஆகிய 3 இடங்களில் பெண்களிடம் 13 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர் . சுமார் ஒரு மணி நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.
பட்டாபிராம் சோழன் நகரைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் சாலையில் நடந்து சென்ற போது 5 சவரன் தாலி செயினையும் அறுத்துச் சென்றுள்ளனர்.