தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை உள்மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.