மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முத்தலாக் மசோதா தாக்கலாகவில்லை.

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கலாகவில்லை.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளநிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவை இன்று துவங்கியதும், பல்வேறு விவகாரங்களை எழுப்பி அதிமுக எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதையடுத்து மாநிலங்களவை முதலில் 2 மணிவரையும், பின்னர், இரண்டு 25 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போதும், எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால், அவை வரும் 2ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கலாகவில்லை.

Exit mobile version