தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்ததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உட்பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து விட்டதாகவும் தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உட்பகுதி வரை, வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழைப்பொழிவானது, அடுத்த 3 நாட்களில் படிப்படியாக குறையும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை, அக்டோபர் 1 முதல் நவம்பர் 23-ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சராசரியாக, 28 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் இந்த கால கட்டத்தில் 33 சென்டி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version