சமூக வளைதளங்களில், அவதூறு மீம்ஸ் கருத்துகளை பரப்பி வந்தவரை காவல்துறை கைது செய்தது

சமூக வளைதளங்களில் பிரதமர் , முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளையும், மோசமான மீம்ஸ்களையும் பரப்பி வந்தவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை இரும்புலியூர் மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் எட்வின் கிறிஸ்டோபர். இவர் சமூக வலைத்தளங்களில் பிரதமர், மற்றும் முதல்வர், துணை முதல்வரை தவறாக விமர்சனம் செய்து கருத்து பரப்பிய எட்வின் கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது ஜெயபிரகாஷ் என்பவர் கொடுத்த  புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல்துறை அவரை கடந்த 17 ஆம் தேதி கைது செய்தனர். அவர்மீது பல்வேறு புகார் உள்ளதால் அவரை 5 நாள் காவலில் எடுத்து இரும்புலியூர் இல்லத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்…

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையில் அவர் 2018 ஆம் ஆண்டு சர்த்சந்த்ரா என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அதே போன்று கோவை ராமச்சந்திரன் என்பவரது 1.40 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி போலியாக பத்திரம் தயார் செய்து அபகரித்துள்ளதும் தெரியவந்தது..

சம்பவம் தொடர்பாக எட்வின் கிஸ்டோபர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எட்வின் கிரிஸ்டோபர் மீது போலி பத்திரம் செய்து நில மோசடி செய்தது, பணம் மோசடி, சமூகத்தில் மிக உயரிய பொறுப்பில் உள்ளவர்கள் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு அவரை மீண்டும் சிறையில் அடைக்கவுள்ளனர்…

Exit mobile version