சிவகங்கையில் , புதிதாக 6 அகழ்வாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரம்!!

சிவகங்கையில், 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில், புதிதாக 6 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில், 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடைபெறுகிறது. முதுமக்கள் தாழியில் மனிதனின் மண்டை ஓடு, கை, கால் பகுதி எலும்புகள் மற்றும் கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட இரு மண் பாண்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த விவசாய நிலத்திலும் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு 6 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு 5 முதுமக்கள் தாழிகள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Exit mobile version