தொழில் நுட்பத்தின் வளர்ச்சி:
நாட்டின் வளர்ச்சி என்பது காலங்களுக்கேற்ப மாறிவருகிறது அதே போல கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அபாரமாக வளர்ச்சி அடந்துள்ளது என்று கூட சொல்லலாம். அதுபோலாவே கணினியின் வளர்ச்சியை காட்டும் வகையில் செயற்கை நுண்ணறிவானது உச்ச நிலை அடைந்துள்ளது. இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களை போலவே செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான செயல் முறையாகும். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையை மிகக் கடுமையாக மாற்றப் போகிறது மற்றும் உலகின் அனைத்து நெருக்கடிகளையும் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நவீன யுகத்தில் நமது வாழ்க்கை பெரும்பாலும் கணினியையே சார்ந்திருக்கிறது. கணினிகள் இல்லாத வாழ்க்கையைப் பற்றி யோசிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சியை கொண்டு வந்துள்ளது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரோபோக்கள்:
செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையான தொழில்நுட்பத்தின் எதிர்காலம், அதை நாம் பல துறைகளில் பயன்படுத்தலாம். தொழில்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன. இருந்தாலும் வரும் காலங்களில் மனிதர்களின் வேலைகளுக்கும் பாதங்கம் ஏற்பட வாய்புள்ளதாக கருதுகின்றனர். ஆனால் அவற்றில் இருந்து நாம் நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்வது அவசியம். இந்த தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதால், வரும் ஆண்டுகளில், AI அதாவது செயற்கை நுண்ணறிவின் பல பயன்களை பார்க்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் வளர்சியானது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவானது மனிதனைப் போல சிந்தித்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளைக் கண்டறிதல், நிலையான, சரியான முடிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு செயல்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை அயல்நாடுகளில் உருவாக்கி அவற்றிக்கு கண்காட்சி போன்று உருவாக்கி மக்களை மகிழ்ச்சியடைய வைக்கவே இந்த ரோபோக்கள் என்றும், இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டன என்று கூறுகின்றனர். மேலும் இவை பார்பதற்கு அச்சுஅசல் மனிதர்களை போலவே காட்சியளிக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவானது நம் இந்தியாவில் ஒடிசாவில் முதல் செய்திவாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது. இப்படியாக பல செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதர்களை போலவே இந்த ரோபோக்களும் தோற்றமளிக்கின்றனது. அதன் மீதான எதிர்பார்ப்பு என்பது மக்களிடையே கூடுதலாகவே உள்ளது. இந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.
கூடுதல் தகவலுக்காக :