சென்னையில், தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சி

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் குறைந்து, 31 ஆயிரத்து 472 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், தங்கம் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து, மூவாயிரத்து 934 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 632 ரூபாய் குறைந்து, 31 ஆயிரத்து 472 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாயும், ஒரு கிலோ வெள்ளி இரண்டாயிரம் ரூபாயும் சரிந்துள்ளது.

Exit mobile version