சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக, தண்டேவாடாவின் பஸ்தாரில், முதல்முறையாக பெண்கள் கமாண்டோ படை அமைக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து காணப்படும் நக்சல்களின் ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில், கடந்த ஆண்டு பஸ்தாரியா பட்டாலியன் என்ற கமாண்டோ குழுவினரை சி.ஆர்.பி.எப் படையினர் அமைத்தனர். இதில் ஆண், பெண் உள்பட பல இளைஞர்கள் சேர்ந்து பயிற்சி பெற்று, நக்சல்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த குழுவில் இருந்து, டி.எஸ்.பி. தினேஸ்வரி நந்த் தலைமையில், 30 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நக்சல் எதிர்ப்பு கமாண்டோக்களாக பயிற்சி பெற்று வருகின்றனர். தண்டேஸ்வரி ஃபைட்டர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில், சரணடைந்த பெண் நக்சல்கள் 5 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த கமாண்டோக்களின் பயிற்சி, தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இவர்களுக்கு பைக் ஓட்டும் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் நவீன ஆயுதங்களை கையாளும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.