இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 262 பேர் பலியாகியுள்ளனர்.
கொழும்பில் உள்ள புகழ் பெற்ற கொச்சிகடை அந்தோணியார் தேவாலயம், மட்டக்களப்பு கட்டுவாபிட்டியா தேவாலயம், நீர் கொழும்பில் உள்ள தேவாலயம், கிங்ஸ் பெர்ரி, சான் கிரில்லா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி, கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போது அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால், பலர் உடல் சிதற தூக்கி எரியப்பட்டு, அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களில் 262 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இலங்கையில் வெடிக்காத நிலையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே இருந்து வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது. விமான நிலைய அருகில் இருந்த பிளாஸ்டிக் குழாயில் வெடிக்காத நிலையில் இருந்த குண்டு கண்டெடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கைப்பற்றிய அதிகாரிகள் செயலிழக்க செய்தனர்.