தமிழகத்தில் தொழில் தொடங்க உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகளை, 38 ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆளுநர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், இந்தியாவிலே தமிழகத்தில் தான் 40 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருவதாக கூறினார். சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலம் 11 துறைகளை இணைத்து, தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.