காரில் போலி PRESS ஸ்டிக்கர்; கடத்தல் நபர்கள் கைது

500 மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போலி பத்திரிகையாளர்கள் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து காரில் கடத்தி வந்த 500 மதுபாட்டில்கள் பறிமுதல்: சென்னையை சேர்ந்த போலி பத்திரிகையாளர்கள் விஷ்ணு , ஆனந்த் ஆகிய 2 பேர் கைது செய்யப்படனர்.

முழு விவரம்:

சென்னையில் போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி திருமங்கலம் பகுதியில் வீட்டில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த நேபால் நாட்சைச் சேர்ந்த தனுஷ்பிந்தாஸ் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1, 398 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கள்ளச்சந்தை மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இந்நிலையில் அரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி மற்றும் காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் ஆய்வாளரின் தலைமையிலான காவல் துறையினர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவங்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் 3 கார்களை மடக்கிப் பிடித்தனர். சுதாகரித்துக் கொண்ட குற்றவாளிகள் வாகனங்களில் இருந்து தப்பியோடிவிட அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்துவரும் நேபாள் நாட்டைச் சேர்ந்த சோனு (39) என்பவர் மட்டும் காவல் துறையினரிரம் பிடிபட்டார்.

மேலும், மடக்கிய வாகனங்களை பரிசோதனை செய்தபோது அதில் 60 பெட்டிகள் அடங்கிய 2,880 மதுபாட்டில்களும் 50 பெட்டிகள் அடங்கிய 477 பீர் பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த கார்களில் judge, govt of india போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டது. இதை வைத்தே வழிநெடுகிலும் அவர்கள் பயணித்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கண்டெய்னர் லாரி மற்றும் 3 கார் ஆகிய வாகனங்களையும் மொத்தமாக கைப்பற்றப்பட்ட 3,327 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் காவல் துறையினர் சோனு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை மதுவிலக்கு அமலாக்கத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபானக் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. எனவே கள்ளச் சந்தையில் மதுபானங்களை இரட்டிப்பு விலைக்கு விற்கும் பொருட்டே இந்த மதுபாட்டில்கள் மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு வரப்படுவதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே திருமங்கலத்தில் ஒருவர் கைதாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். எனவே பிடிபட்ட சோனுவிடம் நடத்தப்படும் விசாரணையில் மதுபாட்டில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது? சென்னையில் யாரிடம் கொண்டு சேர்க்கப்படவுள்ளது? கைப்பற்றப்பட்டை அடையாள அட்டையில் உள்ள போலி பத்திரிக்கையாளர் யார் ? அடையாள அட்டை கொடுத்த சங்கத்தை பற்றியும்? நீதிபதி என்று ஸ்டிக்கர் ஓட்டிய வாகனங்கள் யாருடையது என்பது குறித்து கேட்டு இந்த மதுபானக் கள்ளச் சந்தை சங்கிலியை உடைக்கும் அடுத்தகட்ட முயற்சியில் மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் ஈபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் மதுவிலக்கு அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதனை அழிக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version