மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களுக்கு அருகே உள்ள இடத்தை உரிமையாளர்களிடம் கேட்காமல் பிடுங்கிக் கொள்ளலாம் என திண்டுக்கல்லில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கூட்டத்தில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேயிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நகராட்சி திட்டப்பணிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, பேருந்து நிலையம் கட்ட மாநகராட்சிக்கு சொந்தமாக 15 ஏக்கர் இடம் உள்ளது என்றும், கூடுதல் இடம் வேண்டுமெனில் அருகில் இருப்பவர்களின் இடத்தை நஷ்டஈடு வழங்காமல் வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்தை தொடங்கலாம் என்றும் கூறியது அதிகாரிகள், அமைச்சர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.