என் மேலேயே சந்தேகமா? கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

பண்ருட்டி அருகே, கணவனை மனைவியே மண் வெட்டியால் அடித்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெகதீசன், அதே பகுதியைச் சேர்ந்த நதியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜெகதீசன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த நதியா மண் வெட்டியால் ஜெகதீசனை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலைக்கு காரணம் கள்ளக்காதல் என்பதை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான நதியா மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

Exit mobile version