ஏரியில் கொட்டப்படும் மனித கழிவுகள் !

சென்னையில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஏரி, குளங்கள் பராமரிப்பு இல்லாமலும், சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு வந்த லாரி ஒன்று மனிதக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டக்கூடிய வீடியோ வெளியானது. மக்கள் பயன்படுத்தும் ஏரியில் திமுகவினர் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடுவதை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக திமுக பிரமுகரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

YouTube video player

Exit mobile version