தமிழக மக்களை விடியா அரசு எப்படி காப்பாற்றும் !! கேஎஸ் ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முன்னாள் திமுக செய்தித் தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி திருக்கோயில், குடமுழுக்கு வரும் 26ம் தேதி நடை பெற உள்ளது. இந்த கோயிலில் சுண்ணாம்பு அடிப்பது முதல் கோபுர கலசம் வைப்பது வரை அனைத்து விதமான திருப்பணிகளுக்கும், உண்டியல் காணிக்கையை வைத்தே திருப்பணிகள் நடப்பதாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். உண்டியல் பணத்தை மட்டுமே வைத்து பணிகளை மேற்கொள்ளும் விடியா அரசின் அறநிலையத்துறை, அதிகம் லாபம் வரக்கூடிய கோயில்களின் உண்டியல் பணத்தை அபகரிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். பழனி கோயில் குடமுழுக்கு அன்று 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி என்றும், ஆன்லைன் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என கூறுவது, இந்து அறநிலையத் துறையின் கையாலாகாதத்தனமா என்றும், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version