கற்றாழை ஜெல்லில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் பயன்படுத்துகிறார்கள்.வீட்டிலேயே கற்றாழை பேஸ் மாஸ்க் தயாரிப்பதற்கான சில டிப்ஸ் இதோ..
1.முதலில் கற்றாழையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு தேன், மஞ்சள் ,பால் , பன்னீர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவ வேண்டும்.பின்பு 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பளபளவென முகம் ஜொலிக்கும்.
2.முகப்பரு உள்ளவர்கள் முகத்தில் கற்றாழை ஜெல்லை தடவிவிட்டு முகத்தை கழுவினால் முகப்பரு குறையும்.
3. கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரி ஜூஸ், தயிர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
4.சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு, கற்றாழை ஜெல்லை சேர்த்து முகத்திற்கு scruber-ஆக பயன்படுத்தலாம்.இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள dead cells குறையும்.
5. நீங்கள் தினமும் பயன்படுத்தும் எண்ணெயுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து இரவு முழுவதும் தலையில் ஊறவிட்டு, காலையில் கழுவவும்.இப்படி செய்து வந்தால், ஆரோக்கியமான தலைமுடி வளரும்.