ப்ளீஸ் விட்டுடுங்க… காலில் விழுந்து கதறிய வாய்ச்சொல் வீரர் மதன் சிக்கியது எப்படி?

யூடியூபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர். சென்னை அழைத்து வரும் மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கள்ளனர்…

மதன் டாக்ஸி மதன் 18 பிளஸ் போன்ற யூடியூப் சேனல்கள் மூலமாக தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசி விளையாடிய மதன் மீது சமூக வலைதளங்களில் வைரலான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வந்தனர் இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் தொடர்பாக 509 ஆபாசமாக பேசுதல் 294b தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்…

இந்த நிலையில் சேலம் சென்ற தனிப்படை போலீசார் கிருத்திகையும் 8 மாத குழந்தையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதன் நடத்தக்கூடிய யூடியூப் சேனல் உடைய நிர்வாகியாக கிருத்திகா செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதேபோன்று பெருங்களத்தூரில் இருந்த மதனின் தந்தை மாணிக்கத்தை அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வந்த நிலையில் இன்று மதனை தருமபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்…

உஷார்! குழந்தைகளைக் குறிவைக்கும் ஆபாச வீடியோ ஆசாமிகள்

யூடியூபர் மதன் சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கைது செய்ய முடியாமல் விபிஎன் என்று சொல்லப்படுகின்ற செயலி மூலமாக தனது லொகேஷனை மாற்றி மாற்றி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் விசாரணை வளையத்திற்குள் அவரது மனைவி கிருத்திகாவும் அவரது தந்தை மாணிக்கல்தையும் கொண்டு வந்து விசாரணை நடத்தி வஙாகிக்கணக்குகளை முடக்கினர். கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்ததும் மதன் சிக்குவது உறுதியானது…

இந்தநிலையில் பெங்களூரில் முகாமிட்டிருந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார். மதனின் லொகேஷனை வைத்து தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆன்லைனில் தன்னை மிகப் பெரிய வீரனாகவும் ஜாம்பவனாகவும் காட்டிக் கொண்டு ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசிய மதன் தர்மபுரியில் கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலில் விழுந்து தன்னை விடுவிக்கும்படி கெஞ்சி கதறி அழுதுள்ளார்.

பாபா-தப்பி ஓடவில்லை-ஓய்வெடுத்தார்-தாத்தா கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்-புது விளக்கம்

நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய மதனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது…

கைது செய்யப்பட்ட யூடியூபர் மதனின். மதன், டாக்ஸி மதன் 18 பிளஸ் போன்ற யூடியூப் சேனல்கள் மூலமாக தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசி விளையாடிய மதன் மீது சமூக வலைதளங்களில் வைரலான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

 

மனைவிதான் துருப்புச்சீட்டு:

இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புகார் தொடர்பாக 509 ஆபாசமாக பேசுதல் 294b தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சேலம் சென்ற தனிப்படை போலீசார் கிருத்திகையும் 8 மாத குழந்தையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதன் நடத்தக்கூடிய யூடியூப் சேனல் உடைய நிர்வாகியாக கிருத்திகா செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதேபோன்று பெருங்களத்தூரில் இருந்த மதனின் தந்தை மாணிக்கத்தை அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வந்த நிலையில் இன்று மதனை தருமபுரியில் வைத்து கைது செய்துள்ளனர்..

தருமபுரியில் கைதான மதனை சென்னை அழைத்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். பிறகு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version