மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விபத்து !

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருவது வழக்கம்.

இந்த நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் சிலர் மருத்துவமனையின் வெளிப்பகுதியில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை மருத்துவமனையின் பக்கவாட்டு மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2-வது மாடியின் பக்கவாட்டு மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது நோயாளிகளிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

Exit mobile version