வில் அம்பு எய்வதில் உலக சாதனை புரிந்த சென்னையைச் சேர்ந்த சிறுமிக்கு மும்பையில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் – ஸ்வேதா தம்பதியின் மகள் சஞ்சனா. வில் அம்பு எய்தும் போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்த சிறுமி சஞ்சனா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமீபத்தில் வாழ்த்தும் பெற்றிருந்தார். இதனையடுத்து, சிறுமி சஞ்சனாவுக்கு மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உலக சாதனை நிகழ்ச்சியில் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பட்டம் பெற்ற சஞ்சனாவுக்கு மும்பையில் ஆசாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற டாக்டர் பட்டமும், விருதும் வழங்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்று சென்னை திரும்பிய சஞ்சனா, 5 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் சிறுமி என்பதில் பெருமை அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.