தமிழகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்க வேண்டும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

தமிழகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டிசம்பர் ஒன்றாம் தேதி எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில், தமிழகமெங்கும் எச்ஐவி தொற்றை கண்டறிய 2 ஆயிரத்து 561 நம்பிக்கை மையங்களும், 15 நடமாடும் நம்பிக்கை மையங்களும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, ஊட்டசத்துமிக்க உணவு மற்றும் கல்வித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version