காதலர் தினம்: நாய், ஆட்டிற்கு திருமணம் செய்து வைத்து இந்து முன்னணியினர் எதிர்ப்பு

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து முன்னணியினர் நாய்க்கும் ஆட்டிற்கும் திருமணம் செய்து வைத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டத்தின் அக்கரைகொடிவேரி பகுதியில் நடத்தப்பட்ட இந்த நூதன திருமணத்திற்காக மணமக்களைப் போல நாய் மற்றும் ஆட்டை ஊர்வலமாக அழைத்து வந்தனர். மேலும் அவர்கள் கலாச்சாரத்திற்கு விரோதமான காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Exit mobile version