அதானியைக் குற்றம்சாட்டி பல ஆயிரம்கோடி சம்பாரித்த ஹிண்டன்பர்க் நிறுவனம்!

அமெரிக்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் அதானியைக் குறி வைத்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்?. இந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையினால் அதானி நிறுவனத்தின் பங்கீடுகள் சரிவை சந்தித்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த அறிக்கையினை எதிர்த்து அதானி குழுமம் 413 பக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. மேலும் முக்கியமாக ‘இது அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு அல்ல, இந்தியாவின் மீதான தாக்குதல்’ என்று அதானி குழுமம் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளது. இதன்படி நாம் ஹிண்டன்பர்க் பற்றின ஆய்வு ஒன்றினை செய்வோம்.

ஹிண்டன்பர்க் உருவான ஆண்டு 2017 ஆகும். அப்போது வெறும் 5 பணியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனமாகத்தான் இருந்தது. தற்போது 13 ஊழியர்களே இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். 2020ஆம் ஆண்டு நிகோலோ எலக்ட்ரிக் ட்ரக் விவகாரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் பற்றின அறிக்கையை சமர்பித்து நிகோலோ நிறுவனத்தின் சரிவுக்கு காரணமானது ஹிண்டன்பர்க். இந்த விவகாரத்திற்கு பிறகுதான் மிகப்பெரிய நிறுவனமாக வெளியே தெரிந்தது. தற்போது அதானியின் குழுமத்தின் பக்கம் தன் கவனத்தைக் குவித்திருக்கிறது. இதற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும்?

சமீபத்தில் இலங்கையில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது. பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்டது. இப்போதுவரை பாகிஸ்தானால் தனது பழைய பொருளாதார நிலையை மீட்க முடியவில்லை. நேற்று வங்கதேசம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அது ஐ.எம்.எஃப் அமைப்பிடம் 38,000 கோடி கடன் கேட்டுள்ளது. அவ்வமைப்பும் 3,800கோடியினை முன்பணமாக அளித்துள்ளது. தற்போது பொருளாதார பெருமந்தம் நிகழாத துணை கண்டத்தின் மிக முக்கியமான நாடு இந்தியாதான். இந்தியாவில் பொருளாதார பெருமந்தம் நிகழ்த்துவதற்கான செயலை அதானியிலிருந்து தொடங்கியிருக்கிறதா ஹிண்டன்பர்க்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த அமைப்பின் நிறுவனர் ஆண்டர்சன் ஆம்புலன்ஸ் டிரைவராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். இப்போது இவ்வளவு பெரிய நிறுவனத்தினை உருவாக்கியிருப்பது எதன் பின்னணியில் என்று சந்தேகம் எழுகிறது. மேலும் ஆண்டர்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் வசித்த வீட்டிற்கு வாடகை கூட தர முடியாத ஏழ்மை நிலையில் இருந்துள்ளார்.

அதாவது ஹிண்டன்பர்க் நிறுவனமானது ஒரு ஷார்ட் செல்லர் நிறுவனமாகும். தன்னுடைய ஷார்ட் ஷெல்லிங் திறமையினால் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான அதானிக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருக்கிறார் ஆண்டர்சன். ஷார்ட் ஷெல்லிங் என்பது முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவார்கள். எதிர்பார்த்தபடி பங்கு விலை அதிகரித்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். அவ்வாறு பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்திருந்து விலை உயர்ந்த பிறகு விற்பது ஒருவகை முதலீட்டு முறை ஆகும். மாறாக ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று கருதினால் பங்கு சந்தைகளில் முதலில் அதனை விற்க முடியும். முதலீட்டாளர் குறைந்த விலையில் அந்த பங்குகளை வாங்கி பரிவர்த்தனையை நேராக்கி விடுவர். இதன் மூலம் லாபம் சம்பாதிக்கும் முறைக்கு ஷார்ட் ஷெல்லிங் எனப் பெயர். மேலும் இந்தியாவின் செபி போன்ற அமைப்புகள் இதற்கு அனுமதி அளித்துள்ளன.

அதானியின் பங்குசந்தையில் ஹிண்டன்பர்க் நிறுவனமும் ஷார்ட் ஷெல்லராக முதலீடு செய்துள்ளது. தற்போது ஷார்ட் ஷெல்லிங் முறையில் சரியாக அதானியின் பங்குகள் குறைந்த நேரத்தில் பங்குகளை வாங்கி பரிவர்த்தனை செய்துள்ளது ஹிண்டன்பர்க். இதன் மூலம் அந்த நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ளது.

ஹிண்டன்பர்கின் ஆய்வறிக்கைப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அதானி குழுமம் சார்ந்த பங்குகளைத் தெரிந்துகொண்டோம் என்கிறார்கள். இந்திய குடிமகன்களால் மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் பயன்படுத்த முடியும். ஹிண்டன்பர்க் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். அப்படியென்றால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபர் இவர்களுக்கு உதவியுள்ளார். அது யாராக இருக்கும் என்ற கேள்வியும் பொதுவாக எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பணக்காரரின் மீது குற்றம் சாட்டி மிகப்பெரிய தொகையினை ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க நிறுவனம் சம்பாதித்துள்ளது.

Exit mobile version