தரிசனத்திற்கு வந்தவரை 17 ஆண்டுகளாக அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானம்! ரூ.45 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

tirupathi temple

அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் 17 ஆண்டுகளாக பக்தரை அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு 45 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், அழகாபுரத்தில் வசித்து வரும் கே.ஆர்.ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக ரூ.12,250 பணம் கட்டிப் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அவருக்கு தரிசனத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடந்து தரிசனம் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், 17 ஆண்டுகளாக காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து சேலம் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ஒரு ஆண்டுக்குள் தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லாவிடில் 45 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version