கோவையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் 750 அரசு அலுவலர்களும் 150 நுண் பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அரசியல் கட்சி முகவர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஊடகங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.