ஆதரவற்றோரை காப்பகங்களில் சேர்க்க உதவி எண்கள் – சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னையில் ஆதரவற்றோர் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றது.

ஆண்களுக்கு 11 காப்பகங்களும், பெண்களுக்கு 8 காப்பகங்களும், ஆண்-பெண்காப்பகம் ஒன்றும் செயல்படுகிறது. சிறுவர்களுக்கு 5 காப்பகங்களும் , சிறுமிகளுக்கு 4 காப்பகங்களும் , மன நலம் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு 2 காப்பகங்களும் உள்ளன.

அதே போல முதியோர்களுக்கு 2 காப்பகங்களும், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு காப்பகமும் செயல்பட்டு வருகின்றது. மொத்தம் 47 காப்பகங்கள் சென்னை முழுவதும் செயல்பட்டு வருகின்றது.

ஆதரவற்ற , வீடு இல்லாத மக்கள் இங்கு வந்து தங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல மன நலம் பாதிக்கப்பட்டவர்களை இந்த காப்பகத்தில் சேர்க்கலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே காப்பகங்களில் சேர்ப்பதற்காக 1913, 9445190472, 044- 25303849 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version