நாகலாந்து மாநிலத்தின் உயர்கல்வி மற்றும் பழங்குடியினத் துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங். இவர் நெட்டிசன்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் நேற்றைய காதலர் தினத்தை ஒட்டி தனது சமூக வலைதள சுட்டுரை[டிவிட்டர்] பக்கத்தில், சுதந்திரம் என்பது ஒரு பரிசு, அது அனைவருக்கும் பொருந்தாது; நமது நாளை கொண்டாடுவோம், வாழ்க சிங்கிள்ஸ் என்று ட்வீட் செய்திருந்தார். இதனால் சிங்கிளாக இருக்கும் நெட்டிசன்கள் அவரது ட்வீட்டை பகிர்ந்து களிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Freedom is a gift not meant for everyone.
Let us cherish our day. Heil Singles! pic.twitter.com/4icAaRZNPv
— Temjen Imna Along (@AlongImna) February 14, 2023