நாகை மாவட்டத்தில் ஒரு மணி நேரதிற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வாராமாக வெயில் வாட்டி வந்த நிலையில், நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.