தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மைய அலுவலகத்தில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு தடுப்பு குறித்து முதலமைச்சர், துறைச்செயலர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கொசு ஒழிப்பிற்கு சுகாதாரத்துறை சார்பில் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version